Monday, November 23

ஃபிளாக்’ (FLAG). திரை விமர்சனம்.

பெற்றோரை இழந்த சிறுவன் திஹான், பெங்களூரில் உள்ள தனது தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றும் தாத்தாவுக்கு டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும், என்பது கனவு.

இதற்கிடையே, தாத்தா திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகி விடுகிறார். தாத்தாவின் உயிர் அவரது கனவில் தான் இருக்கிறது, என்பதை உணரும் திஹான், தன் மூலம் அவரது கனவை நிறைவேற்ற முடிவு செய்து, தனியாக டெல்லி நோக்கி பயணிக்கிறார். தன் பயணத்தில் பலவிதமான இடையூறுகளையும், மனிதர்களையும் சந்திக்கும் திஹான், தனது தாத்தாவின் கனவை நிறைவேற்றினாரா? இல்லையா ? என்பதை மக்கள் உள்ளத்தில் இயல்பாக இருக்கும் நாட்டுப்பற்றை அடையாளம் கண்டு, அதைச் சமூகப் பொறுப்பாக மாற்றும் வகையில் சொல்வதே ‘ஃபிளாக்’ (FLAG).

 

மொழி, மதம், உணவு மற்றும் உடை எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், ‘இந்தியர்’ என்ற ஒற்றை அடையாளம் அனைவரையும் இணைக்கிறது என்பதையும், பல வேறுபட்ட இனக்குழுக்கள் ஒரே கொடியின் கீழ் அமைதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்வது உலக நாடுகளுக்கே ஒரு சிறந்த பாடமாக உள்ளது என்பதையும் ஒரு சிறுவனின் பயணம் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர்.

மோகனவேல் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிறுவன் திஹான், தனது குறும்புத்தனமான நடிப்பால் வர்வதோடு, பெற்றோரை இழந்து சோகத்தில் வாடும் போது பார்வையாளர்கள் இதயங்களை கனக்கச் செய்கிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் டெல்லி பயணமும், எதிர்கொள்ளும் சில சம்பவங்களும், மனிதர்களும் பார்வையாளர்கள் மனதை பதைபதைக்க வைத்தாலும், தனது இயல்பான குழந்தை தனமான நடிப்பின் மூலமாக, பல்வேறு அனுபவங்களை வழங்கி அவருடன் பயணப்படும் அனுபவத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிக்கி மக்கி ஜா, கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, சினி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் இந்தியாவின் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்களை நினைவுப்படுத்தும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

Related posts: