Monday, April 20

“தேசிய தலைவர்” திரைவிமர்சனம்

.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோரின் தயாரிப்பில் ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில்,தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் ” என்று நம் நாட்டையும், பக்தியையும் போற்றி வாழ்ந்தவர் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக வந்துள்ளது “தேசிய தலைவர்”  இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷீர் நடித்திருக்கிறார். மேலும் பாரதிராஜா, ராதாரவி,, எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர், ஆர்வி உதயகுமார் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு – அகிலன்,
படத்தொகுப்பு:கே.ஜெ.வெங்கட்ரமணன்,மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்திரி, அக்டோபர் 30 இப்படம் வெளியானது

படத்தை பார்ப்போம்

சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் கதை தொடங்குகிறது. தன் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார் தேவர். ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார். மதுரை வைத்தியநாத அய்யருடன் இணைந்து ஹரிஜன மக்களுக்கு மீனாட்சி அம்மன் ஆலய பிரவேசம் நடத்துகிறார்.சுபாஷ் சந்திரபோஸ் வட மாநிலத்தில் இருந்தாலும்,  அவருடனான நெருங்கிய நட்பு, அவருக்கு நம்பிக்கையுரியவர் இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு, , அரசியல் சூழ்ச்சியால் சிறை வாசம், சட்ட போராட்டம், இறுதி காலத்தில் சித்தர் போன்ற வாழ்க்கை என அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களின் சொல்லபடுகிறது இந்த படம் .

நடிகர்கள்

பசும்பொன் முத்துராமலிங்கத்; தேவராக நீண்ட முடியுடன, திருநீறு நெற்றி பொட்டுடன் ஜே.எம்.பஷீர், அவரது  தோற்றத்துடன் தெய்வீக மனிதனின் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து  வாழ்ந்து இருக்கிறார்.

இயக்குனர்  பாரதிராஜா நீதிபதியாக,, ராதாரவி வழக்கறிஞராக மற்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர் ஆர்வி உதயகுமார்  அரவிந்தராஜ்  ஆகியோரின் ஆனுபவ நடிப்பையும் இப்படத்தில் நேதாஜி சுபாஷ் உயிருடன் வந்துவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு உருவ அமைப்பில் ஒத்து போகிறார் நேதாஜி யாக நடித்தவர்.நேரு, காந்தி, காமராஜ் என உருவ அமைப்பில் ஒத்து போகிற அளவில் உள்ள நடிகர்கள் சிறப்பான கண்டுபிடிப்பு அனைத்து துணை கதாபாத்திரங்களும்   கதைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.ஒளிப்பதிவு – அகிலன் படத்திற்க்கு பெரிய பலம்
படத்தொகுப்பு: கே.ஜெ.வெங்கட்ரமணன் படத்திருக்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்துள்ளனர் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அரவிந்த்ராஜ் ஒரு தேசியத் தலைவரின் வாழ்க்கையை பற்றி திரைப்படத்தை எடுக்கும்போது, அது ஒரு ஆவணப்படம் போல இருக்கக் கூடாது என்பதில் ஆர். அரவிந்தராஜ் முழு கவனத்துடன் பணியாற்றியுள்ளார், மேலும் ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, வசனங்களை எழுதி, விறுவிறுப்பான காட்சிகளுடன் அடுத்தது என்ன என்ற எதிர்ப்பார்க்கிறேன் ஆர் அரவிந்தராஜ் அதை இயக்கியுள்ளார் அவரை மனதார முதலில் பாராட்டலாம் இன்றைய  இளைய தலைமுறை உட்பட அனைவரும் காண வேண்டிய படம்

Related posts: