Wednesday, June 24

“ராக்கெட் டிரைவர்” திரைப்பட விமர்சனம்.

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்க, விஷ்வத், சுனைனா, நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி,ஜெகன் , ராமச்சந்திரன் நடிப்பில் ஸ்ரீராம் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி இருக்கும் படம். “ராக்கெட் டிரைவர்”

கதைகளம் :சிறு வயது ஏ.பி.ஜே அப்துல் கலாம் டைம் டிராவல் செய்து இன்றைய காலக்கட்டத்திற்கு வரும் கதை

கதையைை பார்ப்போம் : விஷவத் சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் வழக்கமான வாழ்க்கையில் இருக்கிறார். இவருக்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி மீது மிகப்ப்பெரிய ஆர்வம்  குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.   ஒருநாள் விஷவத் ஆட்டோவில் நாகா விஷால் வழி கேட்கிறார். சென்னையில் யாரையும் தனக்கு தனக்கு தெரியாது நீங்கள் தான் உதவி செய்யவேண்டும் என நாகா விஷால் கேட்கிறார். அதன் பிறகு சில சூழ்நிலை மூலமாக நாகா விஷால்தான் சிறு வயது {ஏ.பி.ஜே அப்துல்கலாம் கலாம் } என தெரிய வருகிறது. பின் எதற்காக கலாம்   இன்றைய காலத்திற்கு வந்துள்ளார். இவரை எப்படி இவருடை பழைய காலக்கட்டதிற்கு அனுப்ப முடியும் என்ற குழப்பம்  ஏற்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு போகின்றனர். இதற்கடுத்து என்ன ஆனது? கலாமை அவருடைய பழைய காலக்கட்டத்திற்கு அனுப்பி வைத்தார்களா ? சிறு வயது அப்துல்கலாம்  இன்றைய காலத்திற்க்கு  வர காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை..

நடிகர்கள்

படத்தில் ஆட்டோ டிரைவர் ஆகவும், அறிவியல் ஆர்வலராகவும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார் விஷ்வத். சிறுவயது அப்துல் கலாமாக நடித்து இருக்கும் நாகா விஷால் சிறப்பாக அன்றைய காலகட்டத்தில் பயன்படுத்திய டிரங்குப் பெட்டியுடன்  கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். காத்தாடி ராமமூர்த்தி நகைச்சுவை காட்சிகளில்    பிராமாதமாக தியேட்டரில் கைதட்டல் வாங்குகிறது  . சுனைனா சில இடங்களில் வந்தாலும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் முதல்பாதி தெளிவில்லாமல் நகர்கிறது. திரைப்படத்தின் இரண்டாம் பாதி நகைச்சுவையுடன் கதைபுரிய வைக்கிறது.

இயக்கம் சிறுவயது அப்துல் கலாம் தற்பொழுது இன்றைய  காலத்திற்க்கு  வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை என்றாலும் சிறப்பாக கதையை கொண்டு போன விதம் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்காத ஒன்று கதையை அழகாக  இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ஆனந்த சங்கர். அவருக்கு பாராட்டு

ஒளிப்பதிவு ரெஜிமல் சூர்யா தாமஸ்-இன் ஒளிப்பதிவு சிறப்பாகவும் படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்துள்ளது.இசை கௌஷிக் கிரிஷின் இசை படத்தின் பலம். தயாரிப்பு அனிருத் வல்லப் இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக   தயாரித்துள்ளார். இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் சிறப்பாக தன் பணியை செய்து உள்ளனர்.

இப்படம் சிறப்பாக  இளைய தலைமுறைக்கு ஏற்றபடம்  அனைவரும் பார்க்க கூடிய படம்.

Related posts: