இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர்-27 க்கு மாற்றம்*
*இயற்கை பேரிடர் காரணமாக 'ராஜா கிளி' படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர்-27 க்கு மாற்றம்*
*புயல் மற்றும் கனமழை காரணமாக டிசம்பர்-27க்கு மாற்றி வைக்கப்பட்ட 'ராஜா கிளி' ரிலீஸ்*
'மிக மிக அவசரம்', 'மாநாடு' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீ...





