
பிப்ரவரி 27, தொலைநோக்குப் பார்வை கொண்ட அறிவியல், ஆன்மீகம், அதிநவீன தொழில்நுட்பச் சிந்தனைகளை எளியநடையில் எழுதி மனதில் பதிய வைத்த எழுத்துலக ஞானி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் 16வது நினைவு நாள். அவர் திரைத்துறையிலும் முத்திரை பதித்தார். விஞ்ஞான எழுத்தாளர் என்று சொல்லப்படும் சுஜாதா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்தார். இதற்காக அவருக்கு வாஸ்விக் விருது கிடைத்தது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்த மின்னணு இயந்திரமே பயன்படுத்தப்பட்டது. சுஜாதாவின் எழுத்து தொடாத துறைகளே இல்லை எனலாம்.










