PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் ” தில்ராஜா “
PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் " தில்ராஜா "
ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் ஆக்ஷன் ,செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் " தில்ராஜா "
விஜய் சத்யா நடிக்கும் " தில்ராஜா " படத்தை PVR Inox Pictures
இம்மாதம் வெளியிடுகிறது.
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio ) என்ற பட நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு " தில் ராஜா " என்று பெயரிட்டுள்ளார்.
சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டி...
