70 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் டத்தோ ராதாரவி
மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘கடைசி தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடைசி தோட்டா’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வையாபுரி, கொட்டாச்சி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமான இதன் முதல் பார்வை போஸ்டர் முதல் சமீபத்தில் வெளியான டைடில் டீசர் வரை அனைத்தும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், ‘கடைசி தோட்டா’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொடைக்கானல், ...
