13 ஆண்டுகளின் உறுதி: கௌதம் ராம் கார்த்திக்கின் நிலைத்த திரைப்படப் பயணம்
13 ஆண்டுகளின் உறுதி:
கௌதம் ராம் கார்த்திக்கின் நிலைத்த திரைப்படப் பயணம்
வெற்றியும் தோல்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனப் பெரும்பாலும் கூறப்படுவது உண்டு. ஆனால் சினிமா என்பது Sprint ஓட்டப்பந்தயமோ அல்லது லிமிட்டெட் ஓவர்ஸ் கிரிக்கெட் மேட்ச்சோ அல்ல — அது மனஉறுதி, நீடித்த பொறுமை மற்றும் இடைவிடாத ஆர்வம் கொண்ட ஒரு கடினமான டெஸ்ட் போட்டி. விமர்சனங்களை எதிர்கொள்வது, தடைகளை உடைப்பது, பல்வேறு வகை சினிமா ஜானர்களை ஆராய்வது, தொடர்ந்து பார்வையாளர்களுடன் இணைவதற்காக முயற்சிப்பது — இதுவே திரைப்படத் துறையில் நீடித்திருப்பதற்கான உண்மையான அடையாளம்.
இந்த மனோபாவத்தின் உயிர்ப்பான சான்றாக நடிகர் கௌதம் ராம் கார்த்திக் திகழ்கிறார்.
கடந்த 13 ஆண்டுகளாக, தைரியத்துடனும் உறுதியுடனும் தமிழ் சினிமாவில் கௌதம் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ளார். சவாலான கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்து, வணிக ரீதியான ...
