*ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்’ 29 ‘படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா*
*ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்' 29 'படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா*
நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, '29' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் '29' எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
ரொமாண்டிக் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் எ...
