“வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் சந்தோஷ் பிரபாகர் நடித்திருக்கிறார்.
”வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் பத்திரிகையாளர் மகன்!
அதி வேகமான இயந்திர வாழ்க்கையில் சிக்கி பல வித போதைக்கு அடிமையாகி பாதை மாறி செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் வெகு சிலரே தங்களின் கனவுகளை நிஜமாக்க ஓடுகிறார்கள்.
அப்படி காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு.
திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக...
