ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்*
*முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்*
*பிரபல கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கும் இந்த குடும்ப திரில்லர் திரைப்படத்தில் சசிகுமார், சுவாசிகா, நரேன், நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் நடிக்கின்றனர்*
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஆர். ரவீந்திரன் தலைமையிலான டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 22வது திரைப்படத்தை தொடங்கியுள்ளது. இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் & மீடியா எல் எல் பி பேனர்களில் சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பிரபல கன்னட இயக்குநரும் பாடலாசிரியருமான ஹரி சந்தோஷ் இயக்க சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். சுவாசிகா, நரேன், அஞ்சலி நாயர், நந...
