மார்ச்-7ஆம் தேதி வெளியாகும் ஷாமின் ‘அஸ்திரம்.
மார்ச்-7ஆம் தேதி வெளியாகும் ஷாமின் ‘அஸ்திரம்.
“தனித்துவமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களம் ‘அஸ்திரம்’” ; நடிகர் ஷாம் நம்பிக்கை.
“’அஸ்திரம்’ படம் எனக்கு கிடைத்த பிரம்மாஸ்திரமா ?” ; நடிகர் ஷாம்.
“சிவகார்த்தியனின் இந்த உயரம் குறித்து நான் ஆச்சர்யப்படவில்லை” ; நடிகர் ஷாம்.
“’அஸ்திரம்’ படத்தில் ஷாமின் ஜோடியாக அறிமுகமாவது எனக்கு கிடைத்த வரம் ; நடிகை நிரா பெருமிதம்.
பத்து புதிய இயக்குநர்களை உருவாக்க ‘அஸ்திரம்’ தயாரிப்பாளர் சபதம்.
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் ஆகிய...
