மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான ‘Immortal’ அக்டோபர் 30-ம் தேதி Sony LIV-ல் பிரீமியராகிறது!
மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான ‘Immortal’ அக்டோபர் 30-ம் தேதி Sony LIV-ல் பிரீமியராகிறது!
எதிர்பாராத சந்திப்பு, மர்மமான ஒரு பெண், மறைக்கப்பட்ட ரகசியம் எனப் பல திருப்பங்களுடன் வந்த திரைப்படம் 'Immortal'.
காதல், மர்மம் மற்றும் அமானுஷ்ய திகில் கலந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் அக்டோபர் 30,2026 அன்று Sony LIV-ல் வெளியாகின்றது.
சென்னையில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. அச்சகத்தில் வேலை செய்யும் Magi (G. V. பிரகாஷ் குமார்), குறைந்த வாடகையில் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடுகிறார். அப்போது சிந்து (கயாடு லோஹர்) என்ற மர்மமான பெண்ணைச் சந்திக்கின்றார். சிந்து தனது ஆடம்பரமான வீட்டில் ஒரு அறையை மிகவும் குறைந்த வாடகைக்கு தருகிறார்.
ஆனால் முதலில் நல்ல வாய்ப்பாகத...
