*மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு!*
*மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு!*
கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு படக்குழுவினர் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ளனர்.
மகிழ் புரொடக்ஷன்ஸ் (Magizh Productions) சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. சமூக அக்கறை கொண்ட கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொடக்கத்திலிருந்தே தனது புதுமையான விளம்பர முயற்சிகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது.
ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் படத்தின் போஸ்டர்களை வெளியிட்ட...
