மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!*
*பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் 'இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்'!*
*விஜய்யின் 'ஜனநாயகன்' பட புகழ் இர்ஃபான் ஜைனி நடிக்கும் மலேசியத் தமிழ்ப்படம் 'இரும்புத் தோட்டம்'!*
*'அடுத்த கட்டம்', 'மைந்தன்' படங்களைத் தொடர்ந்து HAVEN PICTURES, RK கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத் தமிழ்ப்படம் 'இரும்புத் தோட்டம்'!*
ஏ.வி.எல்.டி புரொடக்ஷன் (AVLT PRODUCTION) சார்பில் | ஜெகன் ஜான் பீட்டர் (Jegen John Peter) தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’.
புலனாய்வு க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த தமிழ்ப்படம் விரைவில் தமிழகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.
'அடுத்த கட்டம்', 'மைந்தன்' படங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் HAV...
