“மர்மர்” திரைப்பட விமர்சனம்.
படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், பூவிகா ராஜேந்திரன், ஆர்யா செல்வராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பு – கெவின் ஃபிரடெரிக், படத் தொகுப்பு – ரோஹித்.pro ;ஸ்ரீ வெங்கடேசன்.
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் .
திருவண்ணாமலை மாவட்டத்தில் அருகில் இருக்கும் காடு மலையில் சப்த (ஏழு) கன்னிகள் தெய்வங்களுக்கு திருவிழாவை வருடா வருடம் நடத்துவார்கள்.
ஒவ்வொரு வருடமும் பிரச்சனை யாராவது ஒருவர் மர்மமான முறையில் இறப்பதாக அந்த கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். அதனால் அந்த கோவில் திருவிழா 20 வருடங்களாக நடக்காமலேயே இருக்கிறத...
