*பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!*
*பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!*
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான 'OKUU'-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
'காலா', 'விஸ்வாசம்', 'அரண்மனை 3' உள்ளிட்ட திரைப்படங்களிலும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது தொழில்முனைவோராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், இறுதி 11 மாதங்களில் மட்டும் 551 முறை தயாரிப்பு கலவையில் மாற்றங்களைச் செய்து, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தயாரிப்பை உருவாக்கியுள்ளார்.
பொதுவாக பிரபலங்கள் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல...
