பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மௌன மொழிகள்’ – திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மௌன மொழிகள்’ – திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில், பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’ (Mouna Mozhigal). ஸ்ரீமன், திவ்யா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசு, அஞ்சலிதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து மகிழும் ஒரு கலகலப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மௌன மொழிகள்’ உருவாகியுள்ளது.
வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வ...
