பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் ” ஆகாயம் ” படம் குறித்து இயக்குனர்
அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் "ஆகாயம் " தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.
ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் " ஆகாயம் " படம் குறித்து இயக்குனர்
தினந்தோறும் நாகராஜ்.
டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரித்துள்ள புதிய திரைப்படத்திற்கு "ஆகாயம் " என்று பெயரிட்டுள்ளனர்.
"தினந்தோறும்" திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "மின்னலே", "காக்க காக்க" போன்ற வெற்றிப் படங்கள் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
அவர் தற்போது "ஆகாயம்" திரைப்படத்தை கதை, திரைக்கதை, வ...
