“பல்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா;
“பல்ஸ்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா;
ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது கதையின் வலிமை தான் - தயாரிப்பாளர் K ராஜன்;
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், அர்ச்சனா, KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிஷேக் A R இசையாமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் 22.12.2025 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது :
நடிகர் கூல் சுரேஷ் பேசும் போது,
“இந்த படத்தில் நான் நடிக்கத் தொடங்கிய போது, படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. பின்னர் இயக்குனர் நவீன் சார் வாட்ஸ்அப்பில் படத்தின் ஸ்டில் அனுப்பியபோது, ஆங்கில அறிவு குறைவினால் படத்தின் பெயரை ‘Pulse’ என்பதற்கு பதிலாக ‘Piles’ என...
