பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்).
இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் S சிவராமன் பேசியதாவது..,
இந்த திரைப்படம் உருவாகக் காரணம் என் எடிட்டர் தினேஷ் தான். அவரிடம் கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன போது, சார் இதைப் படமாக்கலாம் என்றார். ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்த போது சோனியா அகர்வால் மேடம் ஞாபகம் வந்தது, மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இசை க...
