நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப நகைச்சுவைத் திரைப்படம்! “வசூல் மன்னன் “
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப நகைச்சுவைத் திரைப்படம்!
"வசூல் மன்னன் "
.................................
நகைச்சுவை படங்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பார்கள். காமெடியில் கலக்கிய, வசூலை குவித்த , மக்களின் மனதை கொள்ளை கொண்ட படங்கள் ஏராளம்.
மக்களால் ரசித்து சிரித்து கொண்டாடப்பட்ட படங்கள் வரிசையில் இன்று நம் கவலைகளை மறந்து சிரித்து மகிழ ஒரு படம் உருவாகி உள்ளது.
தயாரிப்பாளர் ஆறுமுகம் மாதப்பன் தனது எம். எல். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதல் படமாக உருவாக்கி உள்ள "வசூல் மன்னன் " படம் தான் அது.
கன்னக்கோல் படத்தை எழுதி இயக்கிய வேல் குமரேசன் தனது இரண்டாவது படமாக வசூல் மன்னன் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்.
இப்படத்தைப் பற்றி வேல் குமரேசன் கூறும்பொழுது, "ஒருவன் தன் வாழ்நாளில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது என்பதை இப்ப...
