*துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு!*
*துல்கர் சல்மானின் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு!*
துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி ( Pavan Sadineni) இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT). கீதா ஆர்ட்ஸ் ( Geetha Arts) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema) நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா ( Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் (Sandeep Gunnam) மற்றும் ரம்யா குன்னம் ( Ramya Gunnam) தயாரித்துள்ளனர். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT) படத்தின் விளம்பரப் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பக...
