துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்ஷன் படம்
Press Release Tamil & English
துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்ஷன் படம்
துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர்.
பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில், உணர்வுப்பூர்வ அம்சங்கள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. துருவ் விக்ரம் இதுவர...
