திரைக்கலைஞன் “நா. முத்துக்குமாருக்காக” எட்டு இசையமைப்பாளர்கள் ஒரே மேடையில்! பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி*
*திரைக்கலைஞன் நா. முத்துக்குமாருக்காக எட்டு இசையமைப்பாளர்கள் ஒரே மேடையில்! பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி*
*ஜூலை-19 இல் சென்னையில் மிக பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக நடைபெறும் நா.முத்துக்குமார் 5௦-ஆம் ஆண்டு பொன் விழா*
https://youtu.be/0UmY6OU9TI4?si=MxHwVOl6kUZ_IDpH
தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்,
இதற்கான முயற்சிகளை திரைத்துறையினர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இதன் அறிவிப்பு நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர் - இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் - இயக்குநர் ஆர் வி உதயகுமார...
