*‘தாயன்’ படத்தில் பாடல் எழுதி இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா*
*‘தாயன்’ படத்தில் பாடல் எழுதி இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா*
*ஹாலிவுட் பாணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் மிஸ்ட்ரி த்ரில்லர் ‘தாயன்’*
ஸ்காஸ்கா ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் டாடியானா பேபன்கோ (Tatiana Babenko) மற்றும் பிரக்க்ஷை பாபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தாயன்’.
இயக்குநர் பா. சதாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, ‘எதிர்நீச்சல்’ சீரியல் புகழ் ராதிகா வைரவேலவன் (சாருபாலா) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இவர்கள் தவிர ரஷ்யா, சீனா மற்றும் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த நடிகர்கள் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
'தாயன்' படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமார் ராமச்சந்திரன் மேற்கொள்ள, இண...
