*தமிழகம் முழுக்க 5000 மரக்கன்றுகளை நடும் நடிகர் சௌந்தரராஜா*
*தமிழகம் முழுக்க 5000 மரக்கன்றுகளை நடும் நடிகர் சௌந்தரராஜா*
*இயற்கையை பாதுகாக்கனும்.. தமிழகம் முழுக்க மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா*
*நடிகர் சௌந்தரராஜாவின் சமூக அக்கறைக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு*
தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா. கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமா மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌந்தரராஜா இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான மரங்களை நட்டு வருகிறார். அந்த வகையில், சௌந்தரராஜா தனது பிறந்தநாள் மற்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு விழாவை நேற்று கொண்டாடினார். இதையொட்டி காஞ்சிபுரம் வாலாஜ...
