தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், ‘குபேரா’ படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது !!*
*தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், 'குபேரா' படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது !!*
*இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற “குபேரா” படத்தின் முதல் சிங்கிள் “போய் வா நண்பா” !!*
பான் இந்திய படைப்பாக உருவாகி வரும் "குபேரா படத்தின் முதல் சிங்கிள், இசை ரசிகர்களை புயலாக தாக்கியுள்ளது. 'குபேரா' திரைப்படத்தின் முதல் பாடலான ‘போய் வா நண்பா’ அதிரடி இசையில், மென் மெலடி கலந்து அசரடிக்கிறது. இப்பாடல் மூன்று தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.
இப்பாடல் உருவான பின்னணி காட்சிகள், தனுஷின் குரல், மற்றும் அவரின் அசத்தலான நடனம், ராக் ஸ்டார் டிஎஸ்பியின் மயக்கும் இசை, அருமையான வரிகள், எனக் கேட்கும் போதே மாய உலகிற்கு அழைத்து செல்கிறது. சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உர...
