டெல்லி கணேஷ் எப்படி நடித்தாரோ அப்படியேதான் இயல்பிலும் வாழ்ந்தார்.
சில படங்களில் வில்லனாக நடித்திருந்ததை தவிர மற்ற படங்களில் இயல்பாக டெல்லி கணேஷ் எப்படி நடித்தாரோ அப்படியேதான் இயல்பிலும் வாழ்ந்தார்.
காலையில் எழுந்து இயல்பாக வேலைக்கு செல்லும் ஒரு மனிதரைப்போல மனைவி செய்து தரும் உணவை டிபன் கேரியரில் எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு செல்வார்.
தினமும் ஏதாவது ஒரு கம்பெனியின் கார் அவர் வீட்டு வாசல் முன் நிற்கும். படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்து விடுவார்.
ஒரு வேளை கார் இல்லாவிட்டாலோ, தாமதமானாலோ தன் காரில் படப்பிடிப்புக்கு சென்று விடுவார்.
அது என்ன படம், சினிமாவா, தொலைக்காட்சி தொடரா, வெப் தொடரா, விளம்பரமா, நாடகமா, யார் நடிக்கிறார்கள் எதைப் பற்றியும் பெரிதாக தெரிந்து வைத்துக் கொள்ள மாட்டார்.
இறங்கியவுடன் மேக்அப் போடுவார்கள் அப்போதே அன்றைக்கு எந்த காட்சி எப்படி நடிக்க வேண்டும், வசனம் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வார். மேக்கப் முடியும்போது...
