டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ்,
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' சீரிஸ், இப்போது ஸ்ட்ரீமாகி வருகிறது.
சென்னை : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் மலையாள ஒரிஜினல் சீரிஸான "நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்" சீரிஸினை ஸ்ட்ரீம் செய்யத்துவங்கியுள்ளது. அசத்தலான காமெடி ஜானரில், ஐந்து மனைவிகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' சீரிஸ், ஜூலை 19, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்து வருகிறது.
பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சரவெடி காமெடியுடன் அசத்துகிறது
இந்த சீரிஸ்.
சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ம...
