சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது
*Suriya 48 Movie Tamil and English Press Release*
ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா - இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது
மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது.
ஸ்டாராவும், சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டு...
