“சிவ சிவா” என்ற தெய்வீகமான நாட்டுப்புற பாணி வகையிலான பாடலை வெளியிட்டுள்ளது !!
KVN Productions கேடி - தி டெவில் படத்திலிருந்து "சிவ சிவா" என்ற தெய்வீகமான நாட்டுப்புற பாணி வகையிலான பாடலை வெளியிட்டுள்ளது !!
KVN Productions நிறுவனம், தொலைநோக்கு படைப்பாளி பிரேம் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படம் கேடி - தி டெவில் படத்திலிருந்து, "சிவ சிவா" என்ற கன்னட நாட்டுப்புற கீதத்தைப் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. மனதை வசீகரிக்கும் இந்தப் பாடல், கன்னட நாட்டுப்புற இசையின் துடிப்பான சாரத்தை, பாரம்பரியத்தை, கொண்டாடுகிறது.
இப்பாடலைப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யாவால் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட், காட்சிக்கு உயிரூட்டியுள்ளார். இந்தப் பாடல் இந்திய நாட்டுப்புற இசையின் கலாச்சார ஆழத்தையும் கலையின் ஆழத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
முன்னணி பாடகர்கள் கைலாஷ் கெர் மற்றும் பிரேம் (கன்னடம்), விஜய் பிரகாஷ் (தமிழ் மற்றும் தெலுங...
