சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு!
சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தொடர்ந்து ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று வருகிறார். தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் நடிக்கும் திரைப்படம் SK27. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சித்தார்த் தயாரிக்கின்றனர்.இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒவ்வொரு படமும் அவரை ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ‘அமரன்’ படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கிய அவர், ...
