சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*
*GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*
*நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்*
“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக "தேவைக்கு கிடைக்காததும்... தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்...
எப்பவுமே ஒரு வலிதான்..." என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது.
திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
மேலும்...
