கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில், ZEE5 இல் ‘ரகுதாத்தா’ திரைப்படம்
*கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில், ZEE5 இல் ‘ரகுதாத்தா’ திரைப்படம், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !*
*ZEE5 இல் வெளியான வேகத்தில், “ரகுதாத்தா” திரைப்படம், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !*
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம், வெளியான வேகத்தில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து , சாதனை படைத்துள்ளது.
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், வெளியான ‘ரகுதாத்தா’ திரைப்படம், இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது. சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’...
