*கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்*
*மாபெரும் காம்பினேஷன்! கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!*
*சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர் கார்த்தி*
*கார்த்தி - மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்*
தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை திறமையான இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்க, நடிகை மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.
#Karthi30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவி...
