‘கன்னி’ திரைப்பட விமர்சனம்
'கன்னி' திரைப்பட விமர்சனம்
சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி'.
இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதிவு ராஜ்குமார்,
இசை செபாஸ்டியன் சதீஷ்,
படத்தொகுப்பு சாம், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு,
மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பாதைய வழியாக கைக்குழந்த உடன் ஒன்று ,பள்ளி செல்லும் வயதுச்சிறுமி ஒன்று என இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கன்னிப் பெண்ணான சேம்பி நடந்து செல்கிறாள்.மாலை இருட்டாகிறது. அங்கே ஒரு பெரியவர் எங்கே செல்கிறாய் என்று கேட்டவர், பெண்ணுக்கு வழித்துணையாக வந்து அந்த ஊரில் கொண்டு வந்து விடுகிறார்.சேம்பி தன் தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள்.அந்த வீட்டில் ஆள் இல்லை எனவே ஒரு ...
