*தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய சங்கம் தொடங்கினர்*
*தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழ்நாடு தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்*
*தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய சங்கம் தொடங்கினர்*
*நான்கு மொழிகளின் டிஜிட்டல் மற்றும் டிவி துறைகளை ஒருங்கிணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சி*
தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைக...
