‘ஏழுமலை’ படத்தின் டைட்டில் டீசரை — சிவராஜ்குமார் மற்றும் ஜோகி பிரேம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் !!
*Elumale Movie Tamil and English Press Release*
தருண் சுதீர் தயாரிப்பில், ராண்ணா நடிக்கும் 'ஏழுமலை' படத்தின் டைட்டில் டீசரை — சிவராஜ்குமார் மற்றும் ஜோகி பிரேம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் !!
ரக்ஷிதாவின் சகோதரர் ராண்ணா கலக்கும் ‘ஏழுமலை’ டைட்டில் டீசர் வெளியானது !
தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் 'ஏழுமலை' படத்தின் தலைப்பு டீசர், பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. கருநாடா சக்ரவர்த்தி சிவண்ணா (சிவராஜ்குமார்) இந்த டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இயக்குநர் ஜோகி பிரேம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, படம் வெற்றிகரமாக அமைய தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அற்புதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தில், ரக்ஷிதாவின் தம்பி ராண்ணா மற்றும் ‘மகாநதி’ புகழ் பிரியங்கா ஆச்சார் ஜோட...
