எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும் மார்ச் 7 முதல் திரையரங்குகளில்
எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும் மார்ச் 7 முதல் திரையரங்குகளில் !
முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியில் உருவாகியுள்ள எமகாதகி திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக, ஒரு அசத்தலான போஸ்டருடன், படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கிராமத்து பின்னணியில் ஒரு இளம்பெண்ணின் மரணத்தைச் சுற்றிய காட்சிகளை திகில் கலந்து காட்டும் டீசர், இப்படம் வித்தியாசமான ஹாரர் ஜானரில் ரசிகர்கள் இருக்கை நுனியில் வைத்திருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
டீசர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம்...

