இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : ‘தி வெர்டிக்ட்’ படத்தின் செகண்ட் சிங்கிள் தள்ளிவைப்பு..!
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : 'தி வெர்டிக்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் தள்ளிவைப்பு..!
'தி வெர்டிக்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி வரும் திரைப்படம் 'தி வெர்டிக்ட்'.
அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரித்துள்ளார்.
மேலும் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியா...
