‘ஆல் பாஸ்’.படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரிப்பில், மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆல் பாஸ்’. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மோகனா பேசுகையில், “என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க முடிகிறது. ஆனால் எல்லாரும் முன்னாடி நின்று பேச...
