ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு
ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் 'என் சி 51' படப்பிடிப்பு நிறைவு
ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஆர்.பி. பாலா, பி.ஜி. முத்தையா தயாரிக்கின்றனர்
இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
'லெவன்' படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளை குவித்த நவீன் சந்திரா, தான் நடிக்கும் பாத்திரங்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறார். அவரது 51-வது படமான இது, ஒரு புதுமையான கதைக் களத்தை மையமாகக் கொண்டுள்ளது.
ஆர்.பி. பாலா பிலிம்ஸ், பி.ஜி. முத்தையா புரொடக்ஷன்ஸ் பேனர்களில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு திங்கட்கிழமை (அக்டோப...
