*‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட புரொமோஷன் டூரை கொடியசைத்து தொடங்கி வைத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு!*
*‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட புரொமோஷன் டூரை கொடியசைத்து தொடங்கி வைத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு!*
*தமிழ்நாடு முழுவதும் வலம் வரவுள்ள ‘அரிகொம்பன்’ யானை! செல்ஃபி எடுத்து பரிசுகளை வெல்ல ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு!*
*டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!*
‘மேஜிக் பிக்சர்ஸ்’ தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் புரொமோஷன் டூரை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
யானையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகளை வித்தியாசமான முறையில் முன்னெடுக்கும் வகையில், ‘அரிகொம்பன்’ யானையின் பிரம்மாண்ட மாதிரி உருவம் தமிழ்நாடு முழுவதும் பயணித்து பொதுமக்களைச் சந்திக்கும் வகையில் சிறப்பான புரொமோஷன் டூர் திட்டமிடப்பட்டு...
