‘அமரம்’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்
” அமரம் “.மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஆகஸ்ட் 28-ல் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் C.R. ராஜன் பேசியதாவது..,
‘அமரம்’ திரைப...
