*அசத்திய ‘அந்தாதுன்’னும் அசத்த வரும் ‘அந்தகனு’ம் !”*இயக்குநர் தியாகராஜன் !!*
*" அசத்திய 'அந்தாதுன்'னும் அசத்த வரும் 'அந்தகனு'ம் !"*
- *இயக்குநர் தியாகராஜன் !!*
ஹிந்தியில் ‘அந்தாதுன்' என்ற பெயரில் ரிலிஸாகி ஹிட் ஆன படத்தை ‘அந்தகன்' என்ற பெயரில் ரீ மேட் செய்திருக்கிறார், பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். அவர் மகன் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவரிடம் ‘அந்தாதுனு'க்கு இணையா எப்படி ஒரு தமிழ்வார்த்தையை பிடித்தீர்கள்?'என்று கேட்ட போது ''அந்தாதுன் என்றால் ஹிந்தியில, பார்வையற்றவன்னு அர்த்தம். அதுக்கு இணையான, சரியான வார்த்தையை சில நாட்கள் செலவு செய்து தேடினோம். நிறைய ஆய்வு பண்ணினோம். அதில் சிக்கிய வார்த்தைதான் ‘அந்தகன்’.' என்றார்
மேலும் "ஹிந்தியில, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் அந்தப் படத்துக்கு அருமையா திரைக்கதை அமைத்திருப்பார். ஒவ்வொரு காட்சி...
