Saturday, August 1

News

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2*

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2*

News
*யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT - இந்தியன் 2* *இரண்டு பாடல்களையும் எழுதியவர் கபிலன்வைரமுத்து.* நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்று இசை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய...
ஸ்பெஷல்ஸ் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை வெளியிட்டது !!

ஸ்பெஷல்ஸ் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை வெளியிட்டது !!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை வெளியிட்டது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் கலக்கலான காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் கதை, இரண்டு உணவகங்களைச் சுற்றி நகர்கிறது. முதலாவது நிழல்கள் ரவியின் குடும்பத்திற்குச் சொந்தமான "அமுதா கஃபே" என்ற பாரம்பரிய ஹோட்டல். ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு கிடைக்கும் சுவையான சாம்பாருக்காகவே திரும்பத் திரும்ப ஹோட்டலுக்கு வருகை தருகிறா...
“குணா”மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம்!

“குணா”மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம்!

News
குணா மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம் - நடவடிக்கைக்கு தயாராகும் பிரமிட் குரூப். சினிமா பிலிம் வடிவத்தில் திரையிடப்பட்ட போது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தனர். பிலிம் வடிவத்தில் இருந்து டிஜிட்டல் வடிவத்தில் திரையரங்குகளில் படங்கள் திரையிட தொடங்கிய பின்பு அந்தப்படத்தின் முதலீட்டில் எந்த சம்பந்தமும் இல்லாத டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகாரம் செலுத்த தொடங்கின. படத்தின் மூலப்பிரதி தயாரிப்பாளர்களிடம் இருந்தாலும் அதனை தனது டிஜிட்டல் சேமிப்பகத்தில் வைத்திருக்கும் கியூப், சோனி, டிஸ்ஆர் போன்ற நிறுவனங்கள் மூலமே திரையரங்குகளில் படத்தை திரையிட முடியும். இதனால் கியூப் நிறுவனத்திடம் முதலாளியின் உத்தரவுக்கு காத்திருக்கும் வேலையாள் நிலைமைக்கு பட முதலாளிகள், படத்தின் நெகட்டிவ் உரிமை வைத்திருப்பவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அப்படியொரு நிலைமை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1991...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய “பிறந்தநாள் வாழ்த்துகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய “பிறந்தநாள் வாழ்த்துகள்

News
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய "பிறந்தநாள் வாழ்த்துகள்" தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது! https://www.youtube.com/watch?v=LURWfaiHNX0&t=6s தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இதற்கு முன் மலையாளதில் 'ஐயெம் ஏ பாதர்', 'ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாளியான ஐஸ்வர்யா அனில் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவியின் மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரம் சிறப்பு. இன்னொரு முக்கிய வேடத்தில் ...
ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம் ” தீராப்பகை”! சரக்கு பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!!

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம் ” தீராப்பகை”! சரக்கு பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!!

News
ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம் " தீராப்பகை"! விஜயராகவேந்த்ரா ஜோடியாக ஹரிப்ரியா!! சரக்கு பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!! ரசிகர்களால் பாராட்டப்பட்ட சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட மற்றும் இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த " நினைவெல்லாம் நீயடா" ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தற்போது தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் " தீராப்பகை". கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற இவர் தமிழில் "கேஸ் நம்பர் 13", " ஜோக் 101" உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா நாயகியாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் கவர்ச்சியிலும் மிரட்டியிர...
உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார்.

உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார்.

News
இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார். இந்திய மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்து ம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். இந்தச் சந்திப்பின் போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் உடனிருந்தார்....
“ஆர் கே வெள்ளிமேகம்”திரைப்படம்ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

“ஆர் கே வெள்ளிமேகம்”திரைப்படம்ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

News
சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் Sainu Chavakkadan இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் ஆதேஷ்பாலா சின்ராசு கொட்டாச்சி விசித்திரன் விஜய் கௌரிஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர் ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது....
*கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

*கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

News
*லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* * கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  "இந்தியன் 2" டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ச...

ACKO விற்காக மூன்று விளம்பர படங்களை, புகழ்பெற்ற தென்னிந்திய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனந்ன் இயக்கியுள்ளார்.

News
ACKO நிறுவனம் ‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது !! ● ACKO விற்காக மூன்று விளம்பர படங்களை, புகழ்பெற்ற தென்னிந்திய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனந்ன் இயக்கியுள்ளார். ● இந்த விளம்பரப் படங்களில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் ராப்பர் இன்ஃப்ளூயன்ஸர் பால் டப்பா ஆகியோர் நடித்துள்ளனர். ● இந்த விளம்பர படங்கள், காப்பீட்டாளரிடம் இருந்து நேரடியாக கார் இன்சூரன்ஸ் வாங்குவதன் நன்மைகள் குறித்து விளக்குகிறது. இந்தியா, ஜூன் 24, 2024: முந்தைய மூன்று ஹைப்பர்லோகல் ஆட்டோ இன்சூரன்ஸ் விளம்பர படங்களின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, டெக்-முதல் காப்பீட்டு நிறுவனமான ACKO, பார்வையாளர்களுக்கு, உள்ளூர் ரசனையைக் கொண்டு வருவதற்காகச் சென்னையில் ‘ACKO போல வருமா’ என்ற தனது சமீபத்திய விளம்பர பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. டிடிபி முத்ரா சவுத் மூலம் கருத்த...
*ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் – நடிகர் சவுந்தரராஜா*

*ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் – நடிகர் சவுந்தரராஜா*

News
*நம்ம பேச்சு பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் - நடிகர் சவுந்தரராஜா* *ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் - நடிகர் சவுந்தரராஜா* *விஜய்யின் மௌனத்தில் ஆயிரம் வார்த்தைகள் அடங்கி இருக்கு - நடிகர் சவுந்தரராஜா* நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார். அப்போது பேசிய அவர், விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டர்களாக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெய...