Monday, November 23

News

முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்திப்பு! ,

முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்திப்பு! ,

News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக, சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்தித்து, சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், பல்வேறு திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் பெற்றார். அப்பொழுது சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்கள் கேட்டறிந்தார். மேலும், தான் தலைவராக இருந்த போது சங்கத்தின் அதிகாரப்பூர்வ மாத இதழ் வெளிவந்தது, அதன் பின்னர் 13 வருடத்திற்கு பிறகு தொடர்வது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். சங்க வளர்ச்சிக்கும் உறுப்பினர்கள் நலனுக்கும் இந்த சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தார். இது போன்ற முன்னாள் தலைவர்கள் ஆலோசனைகள் என்னை போன்று புதிய தலைமைக்கு, நிர்வாகத்தினை நடத்திடவும் மற்றும் திரைப்படத் துறைக்கு இன்னும் நிறைய புதிய திட்டங்க...
மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான ‘Immortal’ அக்டோபர் 30-ம் தேதி Sony LIV-ல் பிரீமியராகிறது!

மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான ‘Immortal’ அக்டோபர் 30-ம் தேதி Sony LIV-ல் பிரீமியராகிறது!

News
மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான ‘Immortal’ அக்டோபர் 30-ம் தேதி Sony LIV-ல் பிரீமியராகிறது! எதிர்பாராத சந்திப்பு, மர்மமான ஒரு பெண், மறைக்கப்பட்ட ரகசியம் எனப் பல திருப்பங்களுடன் வந்த திரைப்படம் 'Immortal'. காதல், மர்மம் மற்றும் அமானுஷ்ய திகில் கலந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் அக்டோபர் 30,2026 அன்று Sony LIV-ல் வெளியாகின்றது. சென்னையில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. அச்சகத்தில் வேலை செய்யும் Magi (G. V. பிரகாஷ் குமார்), குறைந்த வாடகையில் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடுகிறார். அப்போது சிந்து (கயாடு லோஹர்) என்ற மர்மமான பெண்ணைச் சந்திக்கின்றார். சிந்து தனது ஆடம்பரமான வீட்டில் ஒரு அறையை மிகவும் குறைந்த வாடகைக்கு தருகிறார். ஆனால் முதலில் நல்ல வாய்ப்பாகத...
அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே

அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே

News
அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE) வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.   இன்றைய சமூகத்தில் இளைஞர்கள...
நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் ” வர்ண கதைகள் ” 

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் ” வர்ண கதைகள் ” 

News
நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் " ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாகும் ஃபேன்டஸி வெப் தொடர் " வர்ண கதைகள் " ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார். பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள " இறப்பின் ரகசியம் " படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின் நோயல் ஒளிப...
*சன் டிவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது*

*சன் டிவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது*

News
*‘மெர்சல்’ திரைப்பட பணப் பரிவர்த்தனை விவகாரம்: நடிகை ஸ்ரீபிரியாவின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு முக்கிய சட்ட வெற்றி* *சன் டிவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது* ‘மெர்சல்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்ட கடன் தொடர்பான வழக்கில், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதி ஆகியோரின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. கே. குமரேஷ் பாபு அவர்கள், அக்டோபர் 16 அன்று, மெரினா ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. என். ராமசாமி ஆகியோருக்கு எதிராக சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த உரிமைக் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்...
Nine-day Golu celebration brings India’s spiritual heritage, creativity, and the values of Win @ Life together

Nine-day Golu celebration brings India’s spiritual heritage, creativity, and the values of Win @ Life together

News
Nine-day Golu celebration brings India’s spiritual heritage, creativity, and the values of Win @ Life together Children and parents participate in cultural activities, devotional traditions, and festive experiences Chennai, 16 October, 2026: Bringing India’s spiritual heritage closer to young learners, CK Wonder Kidz is celebrating Navaratri with a nine-day Golu inspired by the Chota Char Dham pilgrimage destinations of Yamunotri, Gangotri, Kedarnath and Badrinath. Centred on the theme ‘Divine Energy, Culture, Creativity, Win @ Life’, the celebrations offer children an engaging way to discover India’s cultural traditions while exploring values that shape their formative years. The themed Golu brings the four sacred destinations to life through a festive display that combines devot...
*இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா – விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது!*

*இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா – விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது!*

News
*இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா – விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது!* *200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 2 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை - இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா!* சென்னை, ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில், ஐஎஸ்எம் (ISM) நிறுவனத்தின் சார்பில் சைமன் போஸ் மற்றும் பாப் சுரேஷ் ஆகியோரின் முன்னெடுப்பில், இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் வெர்டிகல் திரைப்பட வடிவத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த விழாவில், 200-க்கும் மேற்பட்ட வெர்டிகல் திரைப்படங்கள் பங்கேற்றன. அவற்றிலிருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களைப் பாராட்டும் வகையில் மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வெற்றியாளர்களு...
தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ திரைப்படம் – படக்குழுவினருக்குப் பாராட்டு விழா

தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ திரைப்படம் – படக்குழுவினருக்குப் பாராட்டு விழா

News
கில்ட் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், “ஹபீபி” படத்திற்கு பாராட்டு விழா ! தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ திரைப்படம் – படக்குழுவினருக்குப் பாராட்டு விழா! மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான திரைப்படமாகும். ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்; மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 1980-களில் தொடங்கி நிகழ்காலம் வரை ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் இப்படம்...
கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

News
https://youtu.be/jbAKyYd_lqg?si=Q59eaMD3yhwQwGsA கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 16-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து, தங்களது அனுபவங்களையும் படத்தின் உருவாக்கம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்… ...
*ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்  விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!*

*ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!*

News
*ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!* சென்னை தியாகராய நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 1979-ஆம் ஆண்டு திரைக்கலைஞர் திரு. சிவகுமார் அவர்களின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோ...