
நடிகர்கள் :-
அஜய் கார்த்தி – விக்னேஷ்
அஞ்சனா நேத்ரன் – பிரியா தர்ஷினி
நட்ராஜ் சுப்பிரமணி (எ) நட்டி – பாலச்சந்தர்
கே.பாக்யராஜ் – கருணாகரன்
விடிவி கணேஷ்
இந்துமதி மணிகண்டன்
சிபி சக்ரவர்த்தி – சந்தோஷ்
தொழில்நுட்பக் குழு:-
எழுத்து – இயக்கம்: கல்யாண் கே.ஜெகன்
கதை: கணேஷ் கே பாபு
ஒளிப்பதிவு: ரவி சக்தி டி.எப்ஃ.டி
படத்தொகுப்பு: கதிரேஷ் அழகேசன்
இசை: மனு ரமேசன்
சண்டைப்பயிற்சி: நைப் நரேன்
பாடல்கள்: யுகபாரதி, விவேக், கணேஷ் மு பாபு, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
படத்தை பார்ப்போம்;
படத்தின் ஆரம்பத்திலேயே பாக்யராஜ் குடியிருக்கும் வீட்டில் இருக்கும் 3 இளைஞர்களில் ஒரு இளைஞர் இரண்டு பேரை கொன்றுவிட்டு, அவரும் நெருப்பு வைத்து எரித்துக்கொள்கிறார்.இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் குடிவாரத நிலையில், ஆட்டோகாரர் மூலம் நாயகன், அந்த வீட்டை பார்க்க வருகிறார் வீட்டை பற்றிய ஹவுஸ் ஒனர் பாக்யராஜ் உண்மை கூறுகிறார் இருந்தும் அந்த வீட்டில் குடி வர துடிக்கிறார் நாயகன் அஜய் கார்த்திக் காரணம் குறைந்த வாடகை பேய் உடன் நான் வாழதயார் ஹவுஸ் ஒனரிடம் நம்பிக்கை வீரவசனத்தை பேசி தைரியத்துடன் அந்த வீட்டில் வசிக்கும் அஜய் கார்த்திக், சில தினங்களுக்குப் பிறகு சில அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார் இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் வீட்டையும் காலி செய்யாமல் அதே வீட்டில் நாயகன் குடியிருப்பது ஏன் ? அந்த வீட்டில் தொடர் மர்ம சாவு நடப்பது ஏன் ? பாக்யராஜின் மகள் அஞ்சனா நாயகனிடம் அடிக்கடி பார்ப்பது ஏன் ?என்பதே பல திருப்பங்கள் படத்தின் மீதிக்கதை..
நாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்திக், ஆரம்பத்தில் சாதாரண இளைஞராக அறிமுகமாகி, அமானுஷ்ய சம்பவங்களால் மனநிலை மாறும் மனிதராக படிப்படியாக மாறும் விதத்தை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பயம், குழப்பம்,தனது அச்ச உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் அறிமுக நடிகர் அஜய்க்கு நல்ல அறிமுக கதாபாத்திரம் தான். அவரது நடிப்புக்கு பலம் சேர்க்கிறது.
வீட்டு உரிமையாளராக வரும் மறைந்த கே. பாக்யராஜ் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார் மற்றும் போலீஸ் அதிகாரியாக வரும் ‘நட்டி’ நட்ராஜ் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
விடிவி கணேஷ் வரும் இடங்கள் கலகலப்பாக அமைந்து படத்திற்குச் சற்று ரிலாக்ஸ் தருகிறது. மற்றும் அஞ்சனா நேத்ரன், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி, சாகுல் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திம் இயல்பான நடிப்பின் மூலம் கவனிக்க வைக்கின்றனர்.
-
- பின்னணி மற்றும் இயக்கம்: பேயை மட்டுமே நம்பி இல்லாமல், கதாபாத்திரங்களின் மனரீதியான பயத்தை வைத்து இயல்பான திகிலை இயக்குனர் கல்யாண் கே. ஜெகன் உருவாக்கியுள்ளார்.
- தொழில்நுட்பம்: ரவி சக்தியின் ஒளிப்பதிவு, ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதையாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாதவாறு காட்சிகளை அமைத்துள்ளது.
படத்தின் மிகப்பெரிய பலம் கடைசி வரை ஒரு பதட்டத்தை நாயகனின் முகம் படம் முழுவதுமே வைத்திருந்தது தான், அந்த பதட்டம் படத்தை வேறு எங்கும் நகர விடாமல் வைத்திருக்கிறது. உங்கள் முயற்சி பாராட்டு.
18+வயது அனைவரும் பார்க்கலாம்.
ரேட்டிங் २;९
