
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோவை பாலா தயாரித்திருக்கும் தில் ராஜா படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார்.
இதில் விஜய் சத்யா ,ஷெரின், ஏ.வெங்கடேஷ், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, அம்ரீஷ், விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனிஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை அம்ரீஷ், பாடல்களை நெல்லை ஜெயந்தன், கலைக்குமார், ஒளிப்பதிவு மனோ ஏ.நாராயணா. படத்தொகுப்பு சுரேஷ் அர்ஷ். மக்கள் தொடர்பு : மணவை புவன்.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின் பிறந்தநாளுக்;காக ஷாப்பிங் செல்கின்றனர் தம்பதியர். இரவில் காரில் வரும் போது வழியில் அமைச்சர் ஏ வெங்கடேஷின் மகன் மற்றும் அவனது மூன்று நண்பர்களும் போதையில் வழிமறித்து ரகளை செய்கின்றனர். அமைச்சரின் மகனை விஜய் சத்யா தாக்கும் போது எதிர்பாராதவிதமாக அடிபட்டு இறந்துவிடுகிறான். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியாகும் விஜய் சத்யா தன் மனைவி மகளுடன் தப்பித்து வந்து விடுகிறார். அமைச்சரின் மூன்று நண்பர்களும் அங்கிருந்து ஒடி விடுகின்றனர். அமைச்சர் ஏ.வெங்கடேஷிற்கு தன் மகன் கொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடித்து பழி வாங்க துடிக்கிறார். போலீஸ்சம்யுக்தா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட, தீவிர தேடுதல் வேட்டை தொடர்கிறது. விஜய் சத்யா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ஒரு பக்கம் வில்லன் கோஷ்ட்டி மறுபக்கம் காவல்துறை துரத்த, குடும்பத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சத்யா, அதில் இருந்து எப்படி மீள்கிறார்? என்பதை திரில்லராகவும் சொல்வது தான் ‘தில் ராஜா’. -ன் மீதிகதை
இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பல பெற்றி படங்களை கொடுத்தவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருந்தாலும், தனது கமர்ஷியல் ஃபார்மூலாவை கையாண்டு பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி திரில்லர் கதைகளம் பக்கவாக கொடுத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா, ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் கட்டழகு என்று அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக சூப்பராக தூள் கிளப்புகிறார் எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து தப்பிப்பதற்காக பதற்றமான சூழல் இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் நடிப்பில் அசத்துகிறார்
விஜய் சத்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஷெரின், தன் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்
அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ் முகம் பார்வையிலே மிரட்டுகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமாருக்கு சில காட்சிகள் வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.
இப்படத்தில் நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிபதிவுமனோ வி.நாராயணாவின் கேமரா சேசிங் காட்சிகளை வேகமாகவும், பாடல் காட்சிகளை , ஆக்ஷன் காட்சிகளை சூப்பராக படமாக்கியிருக்கிறது.
அம்ரீஷ் இசையில், நெல்லை ஜெயந்தன் மற்றும் கலைகுமார் வரிகளில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் தேவையான. பின்னணி இசை திரைக்கதையின் ஒட்டத்திற்க்கு பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ், காட்சிகளை தொகுத்து, படம் முழுவதையும் விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் காட்சிகள் நகர்கிறது .
இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.
திருப்பங்களுடன் சொல்லி படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கமர்ஷியல் ரசிகர்களை திருப்திப்படுத்தும் முழுமையான ஆக்ஷன் திரில்லராக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘தில் ராஜா’ வெல்ராஜா வருவார் .










